இதுதொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியதாவது,
'அத்தியாவசியப் பொருள்கள் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளவும்; ஒரே தேசம், ஒரே சந்தை திட்டத்திற்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவு விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும், விவசாயத் துறையையும் செழிப்படைய உதவும்.
இந்தத் திட்டத்தின் மூலம் விவசாயிகள், தங்களது விளைபொருள்களை நாட்டின் எந்தப்பகுதியிலும் விற்பனை செய்ய முடியும்.
விவசாயப் பொருள்கள் விற்பனைக்கான விவசாய உற்பத்தி சந்தை கூட்டமைப்பில் இருந்து விவசாயிகள் விலக்களிக்கப்பட்டுள்ளனர். இனி, நாட்டின் எந்தப் பகுதியிலும் விவசாயிகள், தங்களது விளைபொருள்களை விற்பனை செய்யலாம். மத்திய அரசு, 'ஒரே தேசம், ஒரே சந்தை' திட்டத்தை செயல்படுத்தியுள்ளது.
விவசாயிகள் உற்பத்தியைப் பெருக்க, வழிகாட்டுதல்கள் குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் தொழில் வளர்ச்சி அடைவதால், வேலை வாய்ப்புகள் பெருகும். நாட்டில் முதலீடுகளை அதிகரிக்க, புதிய நடவடிக்கைகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த ஒரே நாடு, ஒரே தேசம் திட்டத்தின் மூலம் விவசாயிகள் தங்களுடைய விளைபொருள்களுக்கு தாங்களே விலை நிர்ணயித்துக் கொள்ளலாம்' எனத் தெரிவித்தார்.