தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

CAB Protest: குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த அஸ்ஸாம் அரசு பணியாளர்கள் - cab protest new update

திஸ்பூர்: குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக, அஸ்ஸாம் மாநில அரசு பணியாளர் சங்கம் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளது.

Assam govt employees to cease work on Dec 18  cab protest new update  குடியுரிமை சட்ட மசோதாவுக்கு எதிராக அரசு பணியாளர் சங்கம்
Assam govt employees to cease work on Dec 18

By

Published : Dec 15, 2019, 12:19 PM IST

நாடாளுமன்றத்தின் மக்களவை, மாநிலங்களவை ஆகிய இரு அவைகளிலும் பல்வேறு கூச்சல் குழப்பத்திற்கு மத்தியில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. அதற்கு பின் இம்மசோதாவுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலும் வழங்கப்பட்டது. இந்த மசோதாவிற்கு எதிராக அஸ்ஸாம், திரிபுரா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்த சட்டத்தை பெரும்பாலான எதிர்க்கட்சிகளும் கடுமையாக எதிர்த்து வருகின்றன. மேலும் இந்தச் சட்டம் அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்பதால், தங்கள் மாநிலங்களில் இதை அமல்படுத்தமாட்டோம் என பாஜக ஆட்சி நடத்தாத மாநிலங்கள் அறிவித்துள்ளன.

குடியுரிமை திருத்த மசோதாவை எதிர்த்து மார்க்சிஸ்ட்- காங்கிரஸ் இணைந்து போராட்டம்.!

இச்சூழலில், இந்த குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், டிசம்பர் 18ஆம் தேதி வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோம் என அஸ்ஸாம் அரசு பணியாளர்கள் சங்கம் பகிரங்கமாக அறிவித்துள்ளது.

குடியுரிமை சட்டத்திருத்த மசோதா: 5 மாநில முதலமைச்சர்களின் அதிரடி!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details