தமிழ்நாடு

tamil nadu

பாஜகவுக்கு ஆதரவளிக்கும் எளிய வழி வெளிநடப்பு: திக் விஜய் சிங் குற்றச்சாட்டு

By

Published : Dec 11, 2019, 12:19 PM IST

டெல்லி: குடியுரிமை மசோதா தொடர்பாக பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய் சிங், “மோடி-ஷா (பிரதமர்-உள்துறை அமைச்சர்) ஆகியோருக்கு ஆதரவளிக்கும் எளிய வழி, “வெளிநடப்பு” என கூறினார்.

CAB in RS today, Digvijaya says 'walk out would be easiest way to support Modi-Shah'
CAB in RS today, Digvijaya says 'walk out would be easiest way to support Modi-Shah'

குடியுரிமை மசோதா மக்களவையில் தாக்கலாகி எதிர்பார்த்ததை விட அதிக வாக்குகள் பெற்றது. காங்கிரஸின் நிலைப்பாட்டிற்கு ஆதரவளிக்கும் என்று எதிர்பார்த்த அதன் கூட்டணி கட்சிகள் கூட மசோதாவிற்கு எதிராக வாக்களிக்காமல் வெளிநடப்பு செய்து விட்டன.

இதுதொடர்பாக ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய் சிங், “வெளிநடப்பு மோடி-அமித் ஷா கூட்டணிக்கு ஆதரவளிக்கும் எளிய வழி என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் பிகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், லோக் ஜனசக்தி தலைவரும் மத்திய அமைச்சருமான ராம் விலாஸ் பஸ்வான் ஆகியோர், குடியுரிமை மசோதாவுக்கு ஆதரவளிக்கும் நிலைபாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

குடியுரிமை திருத்த மசோதா பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளில் இருந்து அகதிகளாக துரத்தப்பட்ட சிறுபான்மையினரான இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், புத்த பிட்சுகள், சௌராஷ்டிரா உள்ளிட்ட இனத்திற்கு இந்திய குடியுரிமை கிடைக்க வழிவகை செய்கிறது.

மாநிலங்களவையில் மொத்தம் 245 உறுப்பினர்கள் உள்ளனர். அதில் 5 உறுப்பினர்களின் இடங்கள் காலியாக உள்ளன. எனவே, மசோதா நிறைவேற 240 உறுப்பினர்களில் 121 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுகிறது. இந்த நிலையில் திக் விஜய் சிங் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

இதையும் படிங்க: அமித்ஷாவுக்கு வரலாறு தெரியுமா? - சசி தரூர் சாடல்!

ABOUT THE AUTHOR

...view details