குடியுரிமை மசோதா குறித்து கருத்து தெரிவித்த உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்தியநாத், “பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருக்கு பாராட்டு” தெரிவித்தார்.
மேலும், “பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளிலிருந்து இந்தியா வந்துள்ள சிறுபான்மை அகதிகளின் வாழ்வில் ஒளியேற்ற உள்ளது” என்றும் தெரிவித்தார்.
குடியுரிமை திருத்த மசோதாவுக்கு மக்களவையில் ஆதரவு கிடைத்த நிலையில், மாநிலங்களவையிலும் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்தது.
இந்த மசோதா குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு பின்னர் சட்டமாக்கப்படும்.
குடியுரிமை மசோதா யோகி ஆதித்யநாத் வரவேற்பு - குடியுரிமை மசோதா
டெல்லி: குடியுரிமை திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில், உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அம்மசோதாவுக்கு வரவேற்பு தெரிவித்துள்ளார்.
CAB brings light in lives of non-Muslim refugees: CM Yogi