மேற்குவங்க மாநிலம் நைஹட்டி பகுதியில் நடந்த நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்ட அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி கூறியதாவது:
குடியுரிமை என்ற பெயரில், நாட்டு மக்களின் உரிமைகள் பறிக்கப்படுவதை நான் அனுமதிக்க மாட்டேன். மத்திய அரசின் கடுமையான குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக ஏன் மாணவர்கள் போராடுகின்றனர்?
உரிமைக்காகப் போராடும் அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. பல்கலைக்கழகம் செல்லவும் அனுமதி மறுக்கப்படுகிறது. நான் உயிரோடு இருக்கும்வரை, குடியுரிமை திருத்தச் சட்டத்தை (சி.ஏ.ஏ.) மேற்கு வங்கத்தில் அனுமதிக்க மாட்டேன். ஒருவரும் மாநிலத்தை விட்டு வெளியேற்றப்படவோ, தடுப்புக் காவலில் வைக்கப்படவோ மாட்டார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படிங்க : விவசாயிகளின் ஆண்டு வருமானம் மும்மடங்கு உயர்ந்துள்ளது - மம்தா பானர்ஜி