தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மேற்குவங்க தேர்தலுக்கு வியூகம் ரெடி - சிஏஏவை கையில் எடுத்த நட்டா! - சிஏஏவை கையில் எடுத்த நட்டா

கொல்கத்தா: மேற்கு வங்க தேர்தல் அடுத்தாண்டு நடைபெறவுள்ள நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என பாஜக தேசிய தலைவர் நட்டா தெரிவித்துள்ளார்.

நட்டா
நட்டா

By

Published : Oct 20, 2020, 10:35 AM IST

Updated : Oct 20, 2020, 10:59 AM IST

கடந்தாண்டு டிசம்பர் 11ஆம் தேதி, குடியுரிமை திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இருப்பினும், சட்டம் அமல்படுத்தப்படாமல் உள்ளது. மேற்கு வங்க தேர்தல் நெருங்கிவரும் நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என பாஜக தேசிய தலைவர் நட்டா தெரிவித்துள்ளார்.

கரோனா காரணமாக சட்டம் அமல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டதாக அவர் மேற்கு வங்கத்தில் கூறியுள்ளார். பல்வேறு சமூக அமைப்புகளுடனான கூட்டத்தில் அவர் இதுகுறித்து மேலும் கூறுகையில், "திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் நலனுக்காக மம்தா பானர்ஜி தலைமையிலான அரசு பிரித்தாளும் சூழ்ச்சியை கையாண்டுவருகிறது.

நட்டா

ஆனால், பாஜக அனைவரிடன் நலனுக்காகவும் உழைத்துவருகிறது. குடியுரிமை திருத்த சட்டத்தினால் அனைவரும் பயன்பெறுவர். நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நிலையில், அமல்படுத்துவதில் உறுதியாக இருக்கிறோம்.

கரோனா காரணமாக அதை அமல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டது. பழைய நிலை மாறிவருவதால், சட்டத்தை அமல்படுத்துவதற்கான வழிகாட்டுதல்கள் வகுக்கப்பட்டு சட்டத்தை விரைவில் அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

இதையும் படிங்க: குறையும் கரோனா: ஆனால், எச்சரிக்கும் உலக சுகாதார அமைப்பு!

Last Updated : Oct 20, 2020, 10:59 AM IST

ABOUT THE AUTHOR

...view details