குடியுரிமை சட்டத்திருத்த மசோதா கடந்த 9ஆம் தேதி மக்களவையிலும், 11ஆம் தேதி மாநிலங்களவையிலும் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேறியது. இதனை எதிர்த்து வடகிழக்கு மாநிலங்கள் கடும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதனைத் தொடர்ந்து தலைநகர் டெல்லியிலும் மாணவர்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
டெல்லியில் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டம்; பேருந்துகளுக்கு தீ வைப்பு! - CAA Protest
டெல்லி: குடியுரிமை சட்டத்திற்கு எதிரான ஜாமியா பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டத்தில் மூன்று பேருந்துகள் தீ வைத்து கொளுத்தப்பட்டன.
Jamia Millia Islamia students set fire to DTC buses
இந்நிலையில் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் மூன்று பேருந்துகள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. போராட்டத்தில் ஜாமியா பல்கலைக்கழக மாணவர்களுக்கும், காவல் துறையினருக்குமிடையே வன்முறை ஏற்பட்டதையடுத்து பேருந்துகளுக்கு தீவைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க...வாராக்கடனில் சிக்கித் தவிக்கும் பொதுத்துறை வங்கி!