குடியுரிமை திருத்தச் சட்டம் (சி.ஏ.ஏ.), தேசிய குடிமக்கள் பதிவேடு (என்.ஆர்.சி.) ஆகிய சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடந்தது. இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட சமூக செயற்பாட்டாளரும் நடிகையுமான சதாப் ஜாபர், முன்னாள் ஐபிஎஸ் அலுவலர் எஸ்.ஆர். தாராபுரி உள்பட 12 பேர் டிசம்பர் 19ஆம் தேதி கைதுசெய்யப்பட்டனர்.
இவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதுதொடர்பான வழக்கு லக்னோ அமர்வு நீதிமன்றத்தில் நடந்துவந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எஸ். பாண்டே, சமூக செயற்பாட்டாளர் சதாப் ஜாபர், முன்னாள் ஐபிஎஸ் அலுவலர் எஸ்.ஆர். தாராபுரி உள்ளிட்ட 12 பேருக்கு நிபந்தனை பிணை வழங்கி உத்தரவிட்டார்.
இதையடுத்து இவர்கள் விடுவிக்கப்பட்டனர். இவர்களின் 15 நாள்கள் சிறைவாசம் முடிவுக்கு வந்துள்ளது. கடந்த மாதம் (டிசம்பர்) 28ஆம் தேதி காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா, சதாப் ஜாபர் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார் என்பது நினைவுகூரத்தக்கது.
இதையும் படிங்க: பிரதமர் மோடிக்கு பிரியங்கா காந்தி கண்டனம்