தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சுய தனிமைப்படுத்துதலை மீறினால் காவல் துறை நடவடிக்கை - கரோனா குறித்து விஜய பாஸ்கர்

சென்னை: சுய தனிமைப்படுத்துதலை மீறும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார்.

Vijayabaskar
Vijayabaskar

By

Published : Mar 23, 2020, 11:00 AM IST

சீனாவில் கடந்தாண்டு இறுதியில் பரவத் தொடங்கிய கோவிட்-19 வைரஸ் தொற்றின் தாக்கம், தற்போது இந்தியாவில் அதிகரித்துவருகிறது. இதைக் கட்டுப்படுத்த அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன.

அதன்படி வெளிநாட்டிலிருந்து வருபவர்கள் அனைவரும் 14 நாள்கள் கட்டாயம் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், அவர்கள் அதை முறையாகப் பின்பற்றாமல் வெளியே சுற்றிவருவதால்தான் வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரித்துள்ளதாகக் குற்றச்சாட்டு உள்ளது.

சமீபத்தில்கூட பாலிவுட் பாடகி கனிகா கபூர் இந்த அறிவுறுத்தலைப் புறக்கணித்து, விருந்து ஒன்றை நடத்தினர். இந்த விருந்தில் பல பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இறுதியில் பாடகி கனிகா கபூருக்கு வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் சுய தனிமைப்படுத்தலைப் புறக்கணிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி. விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "மக்கள் நல்வாழ்வுத் துறையின் கண்காணிப்பில் வீட்டில் உள்ளவர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கான அரசின் கடுமையான உத்தரவை மீறினால் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

வெளிநாடு சென்று வந்த பயணிகளின் பட்டியல் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறையினரிடம் கண்காணிப்பதற்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது" என்று பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் மேலும் இருவருக்கு கரோனா - எண்ணிக்கை 9ஆக உயர்வு!

ABOUT THE AUTHOR

...view details