கடந்த சில நாள்களாக ஜம்மு-காஷ்மீரின் எல்லையோரத்தில் பாகிஸ்தான் ஊடுருவல்களால் போர்நிறுத்த மீறல் தாக்குதல் நடைபெற்றுவருவதால் அப்பகுதிகளில் பதற்றமான சூழல் நிலவிவருகிறது.
கடந்த 20ஆம் தேதி எல்லையோரத்தில் இரு நாட்டு பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த தாக்குதலில் பாதுகாப்புப் படையினர், பொதுமக்கள் உள்பட ஒன்பது பேர் உயிரிழந்தனர்.
இது குறித்து ஓய்வுபெற்ற லெப்டினென்ட் ஜெனரல் டி.எஸ். ஹூடா எழுதிய கட்டுரையில் தெரிவித்ததாவது:
இந்தியா-பாகிஸ்தான் எல்லையோரப் பகுதியில் கடந்த 20ஆம் தேதி மிகவும் மோசமான தினங்களின் ஒன்றாகும். அன்று இந்தியா, பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடைபெற்ற தாக்குதலில், இந்தியா பீரங்கிகளைக் கொண்டு பாகிஸ்தான் பயங்கரவாத ஏவுதளங்களைத் தாக்கியது.
தாக்குதலின் முடிவில் இந்தியாவைச் சேர்ந்த பொதுமக்கள், பாதுகாப்புப் படையினர் உள்பட ஒன்பது பேர் கொல்லப்பட்டனர். மேலும் பாகிஸ்தான் வீரர்கள் ஆறிலிருந்து பத்து பேர் வரை இறந்திருக்கலாம் என்றும் மேலும் இருதரப்பிற்கும் பயங்கர பொருள்சேதம் ஏற்பட்டதாகவும் பாதுகாப்புப் படைத் தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான்-இந்தியாவிற்கும் இடையே போர் நிறுத்த மீறல்களால் ஏற்படும் தாக்குதல், அதைத் தொடர்ந்து சமூக வலைதளமான ட்விட்டரில் அந்தப் பயங்கர தாக்குதல் குறித்த போலியான காணொலிக் காட்சிகள் பகிர்வு, இருநாட்டு மக்கள் இடையேயான வார்த்தை மோதல் ஆகியவை மிகவும் சர்வசாதாரணமாகப் பார்க்கப்பட்டது.
இருநாட்டிற்கும் மத்தியில் 2003ஆம் ஆண்டு போர் நிறுத்த ஒப்பந்தத்தில் உடன்படிக்கை எட்டியது. அதிலிருந்து அடுத்து ஒரு தசாப்தம் வரை எல்லையோரத்தில் பொதுமக்கள் நிம்மதியாகவும் அமைதியாகவும் வாழ்ந்துவந்தனர்.