மேற்கு வங்க மாநிலத்தின் கலியாகஞ்ச், கரிம்பூர், காரக்பூர் ஆகிய மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்று வருகிறது. 2021ஆம் ஆண்டு மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவை பொதுத்தேர்தலுக்கான வெள்ளோட்டமாக இந்த இடைத்தேர்தல் பார்க்கப்படுகிறது.
கடந்த மே மாதம் நடைபெற்ற மக்களவைத் தேர்தலுக்குப்பின் மாநிலத்தில் நடைபெறும் முதல் தேர்தல் என்பதால், இந்த இடைத்தேர்தல் பெறும் எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ளது. கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக 18 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆச்சரியமளித்தது. மம்தாவின் கோட்டையான மேற்கு வங்கத்தில் பாஜக இந்தளவுக்கு ஊடுருவியுள்ளதை மம்தாவே எதிர் பார்க்கவில்லை.