ஊரடங்கால் மக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ள காரணத்தினால், சாலையில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், காற்று மாசு அளவு குறைந்து, வெளியில் எளிதில் தென்படாத பட்டாம்பூச்சிகளைப் பார்க்கமுடிவதாக பிகாரின் முசாபர்பூர் மக்கள் தெரிவிக்கின்றனர். சுமார் 15 வகையான பட்டாம்பூச்சிகள் லிச்சி தோட்டப் பகுதியில் சுற்றிவந்துள்ளது.
இது குறித்து விலங்கியல் ஆய்வாளர்கள் கூறுகையில், "தற்போது பட்டாம்பூச்சிகள் தென்படுவது நல்ல சூழலின் அடையாளம் ஆகும். பட்டாம்பூச்சிகள் பிரச்னை இருக்கும் பகுதிகளுக்கு இடம்பெயராது.