உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்திற்கு காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி நேற்று (மே 17) கடிதம் ஒன்றை அனுப்பினார். அதில், “புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக ஆயிரம் பேருந்துகளை ஏற்பாடு செய்யவுள்ளோம். இதற்கு உத்தரப் பிரதேச அரசு அனுமதியளிக்க வேண்டும்” எனக் கேட்டுக் கொண்டார்.
இதனால், ராஜஸ்தான், பிகார் உள்ளிட்ட பல்வேறு மாநில அரசுகள் பிரியங்கா காந்தியின் வேண்டுகோளை ஏற்று 500க்கும் மேற்பட்ட பேருந்துகளில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உத்தரப் பிரதேசத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.