கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டம் ஹியூர் பகுதியிலுள்ள கே.ஆர்.ஹள்ளி தேசிய நெடுஞ்சாலையில் இன்று (ஆக.12) அதிகாலை 30 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்தில் தீ விபத்து ஏற்பட்டது.
கர்நாடகா பேருந்து தீ விபத்து; 5 பேர் உயிரிழப்பு - Private bus fire accident
07:42 August 12
பெங்களூரு: சித்ரதுர்கா மாவட்டத்தில் ஏற்பட்ட பேருந்து தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.
அந்த தீ விபத்தில் ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். இது குறித்த தகவலறிந்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடல்களை கைப்பற்றி அருகேயுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து தொடர்பாக நடந்த முதல் கட்ட விசாரணையில், “இயந்திரக் கோளாறு காரணமாக தீ விபத்து நிகழ்ந்திருக்கலாம் என தெரியவந்துள்ளது. இந்த விபத்தில் காயமடைந்தவர்களுக்கு மாவட்ட மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
இதையும் படிங்க:வன்முறையில் முடிந்த பேஸ்புக் பதிவு; பெங்களூருவில் ஊரடங்கு, துப்பாக்கிச் சூட்டில் மூவர் உயிரிழப்பு!