ஐக்கிய அரபு அமிரகத்தின் தலைநகரமான துபாயில் உலகின் மிக பிரபலமான உயர்ந்த கட்டடங்களில் ஒன்றான பூர்ஜ் கலிஃபா கட்டடம் உள்ளது.
பூர்ஜ் கலிஃபாவில் காந்தி 150ஆவது பிறந்தநாளுக்கு மரியாதை! - பூர்ஜ் கலிஃபாவில் காந்தியின் 150ஆவது பிறந்தநாள் புகைப்படங்கள்
துபாய்: மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, அவர் புகைப்படங்கள், உலகின் மிக உயரமான கட்டடங்களில் ஒன்றான பூர்ஜ் கலிஃபாவில் இடம் பெற்றுள்ளது.
இந்த கட்டடத்தில் பல உலக முக்கிய நிகழ்வுகளை எடுத்துரைக்கும் வகையில் அது சமந்தமான புகைப்படங்களை ஏந்தி நிற்பது வழக்கும். மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாள் இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டது. காந்தியின் பிறந்தநாளை சிறப்பித்து போற்றும் வகையில், பூர்ஜ் கலிஃபா கட்டடத்தில் தற்போது காந்தியின் புகைப்படங்கள் ஒரு பக்கமும், இந்திய நாட்டின் தேசியக்கொடி மற்றொரு பக்கமும் இடம் பெற்றுள்ளது. இதற்கு அந்நாட்டு அரசுக்கு இந்திய தூதரகம் நன்றியினை தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க: 71 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்கும் நிஜாமின் சந்ததிக்கும் ஆதவாக தீர்ப்பளித்த இங்கிலாந்து!