தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஊழியரின் சிறு தவறினால் 'பர்கர் கிங்'க்கு இவ்வளவு நஷ்டமா?

சண்டிகர்: வெஜ் பர்கர் ஆர்டர் செய்தவருக்கு நான்-வெஜ் பர்கரை வழங்கியதால், பர்கர் கிங் உணவகத்துக்கு 60 ஆயிரத்து 67 ரூபாயை நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.

burger king sent non veg burger instead of veg
burger king sent non veg burger instead of veg

By

Published : Jan 19, 2020, 4:40 PM IST

பஞ்சாப் மாநிலத்திலுள்ள 'பர்கர் கிங்' உணவகத்தில் 2018ஆம் ஆண்டு, ஒருவர் இரண்டு வெஜ் பர்கர்களை ஆர்டர் செய்துள்ளார். ஆனால், உணவகத்தில் அவருக்கு தரப்பட்ட பர்கரைத் திறந்த பார்த்ததும் அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. காரணம் அவருக்கு வெஜ் பர்கருக்குப் பதிலாக இரண்டு நான்-வெஜ் பர்கர்களை தவறுதலாக 'பர்கர் கிங்' ஊழியர்கள் வழங்கிவிட்டனர்.

தனக்குத் தவறான உணவை வழங்கிய பர்கர் கிங் உணவகத்துக்கு எதிராக, பாதிக்கப்பட்ட அவர் நஷ்டஈடு கேட்டு நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குத்தொடர்ந்தார். இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்ற இந்த வழக்கு ஒரு வழியாக தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

பர்கர் கிங்கின் ஊழியர் தவறுதலாக நான்-வெஜ் பர்கர் வழங்கியது உறுதி செய்யப்பட்டதையடுத்து, 'பர்கர் கிங்' உணவகத்துக்கு 60 ஆயிரத்து 67 ரூபாய் அபராதம் விதித்து நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இதையும் படிங்க: 'இலவச மின்சாரம், குடிநீர்... ' - தேர்தல் அறிக்கை மூலம் கவனம் ஈர்த்த கெஜ்ரிவால்

ABOUT THE AUTHOR

...view details