தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பும்ராவிற்கு எஸ்! ஹர்பஜனுக்கு நோ! - arjuna award

ஹைதராபாத்: 2019ஆம் ஆண்டிற்கான ஆர்ஜுனா, கேல் ரத்னா விருதுகளுக்கு வீரர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

பும்ரா, ஹர்பஜன் சிங்

By

Published : Jul 24, 2019, 5:13 PM IST

Updated : Jul 24, 2019, 5:49 PM IST

விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கும் வீரர்களை கவுரவிக்கும் விதமாக மத்திய அரசு சார்பில் வருடா வருடம் கேல் ரத்னா, அர்ஜுனா விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

விளையாட்டில் சிறந்த சாதனை புரிந்த வீரர்களுக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதும், சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு அர்ஜுனா விருதும் வழங்கப்படுகிறது.

இந்த விருதினை பெறும் வீரர்களுக்கு தலா ஐந்து லட்ச ரூபாய் பணமும், வெண்கலத்தினாலான அர்ஜுனா சிலையும் வழங்கப்படும்.

தொன்மையான தேசிய விருதாக கருதப்படும் அர்ஜுனா விருதுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்கள் ஜஸ்பிரிட் பும்ரா, முகமது ஷமி, ரவிந்திர ஜடேஜா, மகளிர் அணி கிரிக்கெட் வீரர் பூனம் யாதவ், ஹெப்டதலான் வீராங்கனை சுவப்னா ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

இதில், துரதிருஷ்டவசமாக இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங்கின் பரிந்துரையும், யுனிவர்சியாட் 2019இல் தங்கம் வென்ற டூட்டி சந்தின் பரிந்துரையும் நிராகரிக்கப்பட்டுள்ளது.

கேல் ரத்னா விருதிற்கு பரிந்துரைப்பதற்காக நிர்ணயித்த காலக்கெடுவான ஏப்ரல் 30ஆம் தேதிக்கு பிறகு சமர்ப்பிக்கப்பட்ட அனைத்து பரிந்துகளையும் மத்திய அரசு நிராகரித்துள்ளது.

இதனடிப்படையில் டூட்டி சந்த், ஹர்பஜன் சிங், மஞ்சித் சிங் ஆகியோரைப் பற்றிய பரிந்துரைகள் நிராகரிப்பட்டுள்ளன.

Last Updated : Jul 24, 2019, 5:49 PM IST

ABOUT THE AUTHOR

...view details