கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள புலிகேசி நகர்ப் பகுதியில் அடுக்கு மாடி குடியிருப்பு கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இன்று காலை கட்டுமான பணியின் போது கட்டடம் சரிந்து விழுந்ததில், பணியாளர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் இடிபாடுகளில் சிக்கி 9 பேர் படுகாயம் அடைந்தனர். கட்டுமான பணியளர்கள் பீகார், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது.
பெங்களூருவில் கட்டடம் சரிந்து விழுந்ததில் தொழிலாளி ஒருவர் பலி - கட்டட விபத்து
பெங்களூரு: புலிகேசி நகர்ப் பகுதியில் கட்டடம் சரிந்து விழுந்ததில் கட்டுமான பணியாளர் ஒருவர் உயிரிழந்தார். இதில் 9 பேர் படுகாயம் அடைந்தனர்.
bang
சம்பவ இடத்திற்கு விரைந்த காவல், தீயணைப்புத் துறையினர் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இதில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து அந்நகர காவல்துறையினர் முதற்கட்ட விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.