தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சும்மா தொட்டாலே எரியும் 'பல்ப்' - வியக்கவைக்கும் கரண்ட் மனிதர்கள் - வாராங்கல்

தெலங்கானா: வாராங்கல் அருகே உள்ள கன்னாராவ்பேட்டா கிராமத்தைச் சேர்ந்த மின்சார மனிதர்கள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளனர்.

bulb

By

Published : Jul 26, 2019, 11:59 PM IST

தெலங்கானா மாநிலம் வாராங்கல் அருகே உள்ள கன்னாராவ்பேட்டா கிராமத்தைச் சேர்ந்த சங்கராச்சாரி என்பவர் அருகே உள்ள டவுனில் இருந்து புதிய பல்ப் ஒன்றை வாங்கிச்சென்றுள்ளார். அவர் வீட்டில் சென்று அந்த பல்பை கையில் எடுத்தபோது அது பிராகாசமாய் எரிந்துள்ளது.

இதனால் ஆச்சரியமடைந்த சங்கராச்சாரி தனது உடலில் ஏதோ மின்சக்தி உள்ளது என்பதை தெரிவிக்க அந்த பல்பை எடுத்துக்கொண்டு தனது நண்பர்களிடம் சென்றுள்ளார். அவரது நண்பர்கள் ஒருசிலர் அந்த பல்ப்பை வாங்கி பார்த்தபோது அப்போதும் அந்த பல்ப் எரிந்துள்ளது. ஒரு குழந்தையின் கையில் வைத்தபோதும் அந்த பல்ப் எரிந்துள்ளது.

வியக்கவைக்கும் கரண்ட் மனிதர்கள்

மேலும் அங்கிருந்த ஒருசிலரின் உடலில் அந்த பல்ப்பை வைக்கும்போதும் அது ஏதோ மின்சாரத்தால் எரிவது போல் பிரகாசமாக எரிந்தது. இச்சம்பவம் அந்த கிராமத்தில் உள்ள அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details