முன்னாள் ஐஏஎஸ் அலுவலரும், மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைமை அதிகாரியுமான சத்ய நாதெள்ளாவின் தந்தை புக்காபுரம் நாதெள்ளா யுகந்தர் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று காலமானார். 1962ஆம் ஆண்டு முதல் ஐஏஎஸ் அலுவலராக பொறுப்பு வகித்த யுகந்தர், பல்வேறு மத்திய அரசு துறைகளின் முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார்.
அதில் முக்கிய பொறுப்பாக முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவின் செயலாளராகவும், அதுமட்டுமின்றி ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போது நீர்நிலை மேம்பாட்டுக்கான பணப்புழக்கத்தை மாநில அரசின் மூலம் இல்லாமல் நேரடியாக அந்தந்த மாவட்டங்களுக்கே செல்லும் வழிகாட்டுதல்களை முன்வைத்தவரும் இவர்தான்.