பிகார் மாநிலம் பாட்னா ஆல்பர்ட் எக்கா எனும் பகுதியில் இன்று (செப்.6) கட்டடம் இடிந்து விபத்துக்குள்ளானது. அதில் மூன்று குழந்தைகள் படுகாயம் அடைந்துள்ளனர்.
பிகாரில் கட்டடம் இடிந்து விபத்து - இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள குழந்தைகள்! - கட்டட விபத்தில் குழந்தைகள்
17:03 September 06
பாட்னா: ஆல்பர்ட் எக்காவில் இன்று (செப்.6) கட்டடம் இடிந்து விபத்துக்குள்ளானதில், மூன்று குழந்தைகள் படுகாயம் அடைந்துள்ளனர். மேலும் இடிபாடுகளுக்குள் ஐந்து குழந்தைகள் சிக்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தகவலறிந்து சம்பவயிடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் காயமடைந்த குழந்தைகளை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும், ஐந்து குழந்தைகள் இடிபாடுகளுக்குள் சிக்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளதால், மீட்புப் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள குழந்தைகள் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க:மகாராஷ்டிரா 5 மாடி கட்டட விபத்து - இருவர் உயிரிழப்பு