மத்தியப் பிரதேசம், போபாலில் 150 வருடப் பழமையான கட்டடம் இடிந்து விழுந்து விபத்து நிகழ்ந்துள்ளது. மோதி மஹால் சதர் கோயிலின் வாகன நிறுத்துமிடத்திற்கு அருகில் இந்தக் கட்டடம் அமைந்திருந்த நிலையில், வாகன நிறுத்துமிடத்தில் இருந்த பல்வேறு வாகனங்கள் இந்த விபத்தில் சேதமடைந்துள்ளன.
போபாலில் இடிந்து விழுந்த 150 வருடக் கட்டடம்! - போபாலில் 150 வருட கட்டடம் இடிந்து விபத்து
போபால் : 150 வருடம் பழமையான கட்டடத்தின் சுவர்கள் இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் பல வாகனங்கள் சேதமடைந்தன.
building-collapses-in-bhopal-several-vehicles-damaged
இதையடுத்து, மாநிலப் பேரழிவு மீட்புக் குழுவினர் விபத்துப் பகுதிகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளிலும், விபத்து ஏற்பட்டுள்ள இடத்தை சீரமைக்கும் பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
நல்வாய்ப்பாக இந்த விபத்தில் எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை.