தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

குஜராத்தில் கனமழை: மூன்று மாடிக் கட்டடம் இடிந்து விபத்து - மூன்று மாடிக்கட்டடம் இடிந்து விபத்து

குஜராத்: கேதா மாவட்டத்தில் மூன்று மாடிக் கட்டடம் ஒன்று இடிந்து விழுந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது.

building collapse

By

Published : Aug 10, 2019, 7:01 AM IST

குஜராத்தின் கேதா மாவட்டம் நதியாத் அடுத்த பிரகதிநகர் பகுதியில் மூன்று மாடி அடுக்குமாடிக் கட்டடம் ஒன்று உள்ளது. இந்நிலையில் இந்த கட்டடம் திடீரென இடிந்து விழுந்தது.

இதையடுத்து தகவலறிந்து விபத்து நடைபெற்ற பகுதிக்குச் சென்ற மீட்பு படையினர், இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

கட்டட விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் வீரர்கள்

மேலும் தற்போது நான்குபேர் மீட்கப்பட்டுள்ள நிலையில், பலர் சிக்கியிருக்கக் கூடும் என்பதால் மீட்பு படையினர் தேடும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். கனமழைக் காரணமாகவே இந்த கட்டடம் இடிந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

ABOUT THE AUTHOR

...view details