தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பட்ஜெட் 2020: ரூ. 5 லட்சத்துக்கும் கீழ் வருமானம் ஈட்டுபவர்களுக்கு இனி வருமானவரி கிடையாது!

டெல்லி: ஆண்டிற்கு ரூ. 5 லட்சத்துக்கும் குறைவாக வருமானம் ஈட்டும் நபர்களுக்கு இனி வருமானவரி கிடையாது என அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.

By

Published : Feb 1, 2020, 1:40 PM IST

Income Tax
Income Tax

இதுதொடர்பாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2020-21ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கை உரையில் கூறியதாவது :

ஆண்டிற்கு ரூ. 5 லட்சத்துக்கும் குறைவாக வருமானம் ஈட்டும் நபர்களுக்கு இனி வருமானவரி கிடையாது. அதேபோன்று, ரூ.7.5-10 லட்சம் வரை வருமானம் பெறுபவர்களுக்கு 15 சதவீதமும், ரூ.10 - 12 லட்சம் வரை வருமானம் பெறுபவர்களுக்கு 20 சதவீதமும் வருமானவரி வசூலிக்கப்படும்.

அதேபோன்று, ரூ.12.5 -15 லட்சம் வரை வருமானம் ஈட்டுபவர்கள் 25 சதவீதமும், 15 லட்சத்துக்கும் அதிகமாக வருமானம் பெறுவபவர்களுக்கு 30 சதவீதம் வருமானவரியும் அளிக்க வேண்டும்.

இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : 'திருக்குறள் வழியில் நாட்டை வழிநடத்தும் பிரதமர் மோடி' - நிதியமைச்சர் புகழாரம்

ABOUT THE AUTHOR

...view details