2019-20ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை தொடர்பான ஆவணங்கள் தயாரிக்கும் பணி தொடங்கியுள்ளது.
பட்ஜெட் 2019-20: நிதி அமைச்சகத்தில் அல்வா கிண்டும் நிகிழ்ச்சி - நிதி அமைச்சகம்
டெல்லி: 2019-20ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையின் ஆவணங்களை அச்சடிக்கும் பணி தொடங்கியுள்ள நிலையில், நிதியமைச்சகத்தில் பாரம்பரியமிக்க அல்வா கிண்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.
sitharaman
இதனைக் கொண்டாடும் வகையில், டெல்லியில் உள்ள நிதியமைச்சக அலுவலகத்தில் பாரம்பரியமிக்க 'அல்வா கிண்டும் நிகழ்ச்சி' நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா தலைமை தாங்கி, அனைவருக்கும் அல்வா பகிர்ந்து கொடுத்தார். இதில், மத்திய இணை நிதி அமைச்சர் பிரகாஷ் தாக்கூர், அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.