தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பட்ஜெட் 2020: பொருளாதாரத்தை சீர்திருத்தும் நடவடிக்கைகள் நிச்சயம் இருக்கும்! - Prakash Javadekar latest press meet

டெல்லி: வரும் பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ள பட்ஜெட்டில் நிச்சயம் பொருளாதாரத்தை சீர்திருத்தத் தேவையான அறிவிப்புகள் இருக்கும் என்று தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

Prakash Javadekar on Indian economy
Prakash Javadekar on Indian economy

By

Published : Jan 22, 2020, 10:45 PM IST

தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி முன்பு கணித்ததைவிட தற்போது குறைவாக(4.8) இருக்கும் என்று சர்வதேச நாணய நிதியம் அறிவித்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த பிரகாஷ் ஜவடேகர், "வரும் பிப்ரவரி ஒன்றாம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ள பட்ஜெட்டில் பொருளாதாரத்தை மீட்டெக்கும் நடவடிக்கைகள் கண்டிப்பாக இருக்கும். அதில் யாரும் சந்தேகம் கொள்ள தேவையில்லை" என்றார்.

தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பு (என்.பி.ஆர்) குறித்து பேசிய அவர்,"காங்கிரஸ் ஆட்சியிலிருந்தபோதும் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அப்போது நல்லதாக தெரிந்த அது, இப்போது மட்டும் கெட்டதாக தெரிகிறதா?" என்று பதில் கேள்வி எழுப்பினார்.

இதையும் படிங்க:இந்தியா சார்பில் விண்வெளிக்கு போகும் வயோம் மித்ரா - யார் இந்த பெண்?

ABOUT THE AUTHOR

...view details