புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடருக்கான மூன்றாவது நாள் கூட்டம் இன்று தொடங்கியது. புதுச்சேரி மாநிலத்தின் நிதி அமைச்சர் பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் நாராயணசாமி 2019 - 20ஆம் நிதி ஆண்டிற்கான மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ள எட்டாயிரத்து 425 கோடிக்கான பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார். நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்தபோது எதிர்க்கட்சியினர், சபாநாயகர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கடிதம் குறித்து பிரச்னையை எழுப்பி அமளியில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி பட்ஜெட் தாக்கல் - எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு! - முதலமைச்சர் நாராயணசாமி தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையை 'வெற்று காகித' பட்ஜெட் எனக்கூறி எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வெளிநடப்பு
புதுச்சேரி : முதலமைச்சர் நாராயணசாமி தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையை 'வெற்று காகித' பட்ஜெட் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வெளிநடப்பு செய்துள்ளன.
opposition-parties-walk-out
பின்னர் பட்ஜெட் உரையின்போது கடந்த மூன்று ஆண்டு காலமாக பட்ஜெட்டில் அறிவித்த திட்டங்களை செயல்படுத்தாத காங்கிரஸ் அரசை கண்டித்தும், இந்த பட்ஜெட் வெற்று காகித பட்ஜெட் எனக் கூறியும் அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஒட்டுமொத்தமாக வெளிநடப்பு செய்தன. இதற்கிடையே தொடர்ந்து முதலமைச்சர் நாராயணசாமி பட்ஜெட் உரையாற்றினார்.
மேலும், இலவச அரிசி உள்ளிட்ட மக்கள் நலத் திட்ட உதவிகளை உரிய காலத்தில் வழங்க இந்த அரசு தவறிவிட்டது. சுகாதாரமான குடிநீர் மக்களுக்கு விநியோகம் செய்யப்படுவதும் இல்லை. ஒட்டுமொத்தத்தில் அனைத்து துறைகளிலும் காங்கிரஸ் அரசு தோல்வி கண்டுள்ளது என்றார்.