தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பட்ஜெட்2020: புதிய தொழில் முயற்சி நிறுவனங்களுக்கு என்ன பலன்?

நாட்டில் தொடங்கப்படும் புதிய தொழில் முயற்சி நிறுவனங்களுக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய நிதிநிலை அறிக்கையில் கூறிய பலன்கள் என்னென்ன?

Budget 2020 Startup, budget 2020, union budget 2020, budget 2020 India, budget 2020 expectations, budget 2019 highlights, 2020 budget income tax, fm nirmala sitharaman  budget 2020 speculation, financial budget 2020 speculation, பட்ஜெட் 2020, யூனியன் பட்ஜெட் 2020, இந்திய பட்ஜெட் 2020, பட்ஜெட் 2020 எதிர்பார்ப்புகள், பட்ஜெட் 2019 சிறப்பம்சங்கள், பட்ஜெட் 2020, வருமான வரி  நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வருமான வரி அடுக்குகள்
Budget 2020 Startup

By

Published : Feb 1, 2020, 5:37 PM IST

2020 - 2021ஆம் ஆண்டிற்கான மத்திய நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து உரை நிகழ்த்தினார். அதில் புதிய தொழில் முயற்சி நிறுவனங்களை மேம்படுத்த அவர் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகளைக் காணலாம்.

  1. ஒவ்வொரு குடிமகனின் வாழ்க்கையையும் எளிதாக்க நாங்கள் முயற்சி மேற்கொண்டுள்ளோம்.
  2. தொழில் முனைவோரே இந்தியாவின் பலம். வேலைவாய்ப்பை உருவாக்குபவர்களும் அவர்கள்தான். எனவே அவர்களின் முதலீட்டுத் திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்க சிறப்பு பிரிவு அமைக்கப்படும்.
  3. பகுப்பாய்வு, இயந்திரம் மூலம் கற்றல், செயற்கை நுண்ணறிவு, உயிர் தகவலியல் போன்ற தொழில்நுட்பப் பரவல் உற்பத்தி வயதில் உள்ளவர்களின் எண்ணிக்கையை அதிகளவில் உயர்த்தத் திட்டம்.
  4. இரண்டு முக்கிய வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
  5. கடந்த 5 ஆண்டுகளில் இதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டிருப்பதுடன், நமது இளைஞர்களின் உற்சாகமும் ஆற்றலும் வளர்ச்சியைத் தூண்டியுள்ளன.
  6. சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் இந்திய பொருளாதாரத்தின் அடிப்படை அம்சமாகும். எனவே இத்துறையில் கூடுதல் முதலீடு மேற்கொள்ளப்படும்.
  7. நம் நாட்டு மக்களுக்கு நல்ல வேலைவாய்ப்பு கிடைக்க வேண்டும். நமது வர்த்தகங்கள் ஆரோக்கியமானதாகவும், அனைத்து சிறுபான்மையினர், பெண்கள் மற்றும் எஸ்.சி-எஸ்.டி பிரிவினரின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற இந்த பட்ஜெட்டில் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
  8. சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு காரணமாக போக்குவரத்து மற்றும் சரக்குப் போக்குவரத்துத் துறையின் திறன் மேம்பட்டுள்ளது.
  9. அலுவலர்ளின் ஆதிக்கம் ஒழிக்கப்பட்டு, குறு, சிறு, நடுத்தர தொழில் துறை நுகர்வோர்களும் ஆண்டுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு பயனடைந்துள்ளனர்.
  10. தொழில் துறைக்கும், வர்த்தகத் துறைக்கும் 27,300 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  11. கட்டமைப்புத் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு, 5 புதிய பொலிவுறு நகரங்கள் ஏற்படுத்தப்படும்.
  12. வறுமையை ஒழிக்க, சுய உதவிக்குழுக்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்படும்.
  13. கம்பெனி சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படும், பெரு நிறுவனங்களுக்கு சலுகைகள் வழங்கப்படும்.

ABOUT THE AUTHOR

...view details