தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பட்ஜெட்2020: உள்கட்டமைப்பை மேம்படுத்த என்னென்ன திட்டங்கள்?

நாட்டின் உள்கட்டமைப்பு குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய நிதிநிலை அறிக்கையில் கூறிய முக்கிய தகவல்கள்...

By

Published : Feb 1, 2020, 12:55 PM IST

budget 2020, union budget 2020, budget 2020 India, budget 2020 expectations, fm nirmala sitharaman, பட்ஜெட் 2020, யூனியன் பட்ஜெட் 2020, இந்திய பட்ஜெட் 2020, பட்ஜெட் 2020 எதிர்பார்ப்புகள், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய நிதிநிலை அறிக்கை 2020
Budget 2020 Infrastructure

2020 - 2021ஆம் ஆண்டிற்கான மத்திய நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து உரை நிகழ்த்திவருகிறார். அதில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த அவர் வெளிட்ட முக்கிய அறிவிப்புகளைக் காணலாம்.

  1. போக்குவரத்துக் கட்டமைப்புகளுக்கு ரூ.1.7 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு
  2. 5 ஆண்டுகளுக்கு நாட்டின் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்த ரூ.11 லட்சம் கோடி ஒதுக்கீடு
  3. சென்னை- பெங்களூரு இடையே வர்த்தக வழித்தடம் அமைக்கப்படும்
  4. ரயில் பாதையை ஒட்டிய ரயில்வேக்குச் சொந்தமான இடத்தில் சூரிய மின்னுற்பத்தி செய்யப்படும்
  5. 27,000 கி.மீ. தூர ரயில் பாதை மின்மயமாக்கப்படும். டெல்லி - மும்பை அதிவிரைவு சாலைப் பணியை 2023ஆம் ஆண்டுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது
  6. அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் குழாய்கள் மூலம் குடிநீர் வழங்கும் திட்டத்துக்கு 3.6 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு
  7. குடிநீர்ப் பற்றாக்குறைய போக்க 'ஜல் ஜீவன் திட்டம்' கொண்டுவரப்படும்.
  8. நாடு முழுவதும் சரக்கு போக்குவரத்தை மேம்படுத்த 9000 கி.மீ.க்கு பொருளாதாரப் பாதை அமைக்கப்படும்

ABOUT THE AUTHOR

...view details