மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார். இந்திரா காந்திக்குப் பிறகு நாட்டின் இரண்டாவது பெண் நிதி அமைச்சரான நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் 2020-21ஆம் ஆண்டுக்கான முழுமையான பட்ஜெட் இது. இந்தியப் பொருளாதாரம் கடந்த ஆறாண்டுகளாக கண்டிராத வகையில் சரிந்துள்ளது.
மத்திய பட்ஜெட் 2020: வருமான வரி வரம்பு குறித்த தகவல்கள் - income tax slab
வருமான வரி வரம்பு குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய நிதிநிலை அறிக்கையில் கூறிய முக்கிய தகவல்கள்...
Budget 2020:Income tax
இந்நிலையில் நிதியமைச்சர் தாக்கல் செய்யும் நாட்டின் வரவு-செலவு திட்ட நிதிநிலை அறிக்கையானது, சரிந்த பொருளாதாரத்தை மீட்க மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பதை அறியும் வகையில் அமைத்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வருவாய் | 2020-2021 (தற்போது) | 2019-2020 (சென்ற ஆண்டு) |
0 - 5 லட்சம் | வரி இல்லை | வரி இல்லை |
5 லட்சம்- 7.5 லட்சம் | 10% | 20% |
7.5 லட்சம் - 10 லட்சம் | 15% | 20% |
10 லட்சம் - 12.5 லட்சம் | 20% | 30% |
12.5 லட்சம் - 15 லட்சம் | 25% | 30% |
சாதாரண மக்களின் வருமானத்தை உயர்த்தும் பட்ஜெட்டாக இருக்கும் எனக்கூறி நிர்மலா சீதாராமன் தனது உரையைத் தொடங்கினார்.
- வருமான வரி குறித்த நிதியமைச்சரின் அறிவிப்பு பின்வருமாறு:
- இரண்டு ஆண்டுகளில் புதிதாக வருமான வரி செலுத்துவோரின் எண்ணிக்கை 15 லட்சமாக உயர்ந்துள்ளது.
- வரி கணக்கு செலுத்துவதற்கான எளிய முறை ஏப்ரல் மாதம் முதல் அறிமுகப்படுத்தப்படும்
- 40 கோடி வருமான வரிக் கணக்குகள் நாடு முழுவதும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
- ஜிஎஸ்டி வருவாய் 1.10 லட்சம் கோடி ரூபாயை தாண்டியுள்ளது.
- ஜிஎஸ்டி வரியால் ஒவ்வொரு குடும்பத்துக்கும் 4 சதவிகித செலவு குறைந்துள்ளது.