தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

நிர்மலா சீதாராமன் மேற்கோள்காட்டிய ’பூமி திருத்தி உண்’ வரியின் விளக்கம்? - ஆத்திச்சூடி வரி மேற்கோள் காட்டிய நிர்மலா சீதாராமன்

மத்திய நிதிநிலை அறிக்கை தொடர்பாக உரை நிகழ்த்திவரும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஔவையாரின் ஆத்திச்சூடியில் வரும் ’பூமி திருத்தி உண்’ வரியை மேற்கோள்காட்டியுள்ளார்.

budget-2020-aathichoodi
budget-2020-aathichoodi

By

Published : Feb 1, 2020, 11:58 AM IST

2020ஆம் ஆண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நாடாளுமன்றத்தில் தாக்கல்செய்து உரை நிகழ்த்திவருகிறார். 2020ஆம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதே பட்ஜெட்டின் நோக்கம் என்று தெரிவித்து வேளாண் துறைக்கான செயல்திட்டங்களை நிதியமைச்சர் அறிவித்தார்.

அப்போது, தமிழ்ப்புலவர் ஔவையார் எழுதிய ஆத்திச்சூடி வரியை மேற்கோள்காட்டி நிதியமைச்சர் பேசினார். அதில் ’பூமி திருத்தி உண்’ என்ற வரியை மேற்கோள் காட்டிய அவர், அவ்வரிகளை விவசாயிகள் பின்பற்ற வேண்டும் என்றும் கூறினார். இவ்வரியின் மூலம் விவசாயத்தின் மகத்துவத்தை ஔவையார் உணர்த்தியதாகவும் நிதியமைச்சர் புகழாரம் செய்தார்.

வரியின் விளக்கம்: விளைநிலத்தை உழுது அதில் பயிர்செய்து உண்ண வேண்டும்.

கடந்த ஜூலை மாதம் இடைநிலை பட்ஜெட்டை தாக்கல்செய்தபோது, புறநானூற்றுப் பாடலை நிர்மலா சீதாராமன் மேற்கோள்காட்டியது நினைவிருக்கலாம்.

ABOUT THE AUTHOR

...view details