உத்தரப் பிரதேச மாநிலம் சோன்பத்ரா கிராமத்தில் வசிக்கும் பழங்குடியின மக்களின் நிலங்களை தங்களுக்கு கொடுக்குமாறு மாற்று சமூகத்தினர் கட்டாயப்படுத்தினர். ஆனால் அதற்கு பழங்குடியின மக்கள் மறுப்பு தெரிவித்த நிலையில், அங்கு கலவரம் ஏற்பட்டு 10 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்தக் கலவரத்தில் தொடர்புடைய 15 அரசு அலுவலர்களுக்கு எதிராக உத்தரப் பிரதேச அரசு நடவடிக்கை எடுத்தது.
சோன்பத்ரா கலவரம்: கிராமத் தலைவர் உள்பட 51 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை! - சோன்பத்ரா கலவரம்
லக்னோ: சோன்பத்ரா கலவரத்தில் கிராமத் தலைவர், அவரின் சகோதரர்கள் உள்பட 51 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
Sonbhadra
இந்நிலையில், கிராமத் தலைவர் யக்யதத், அவரின் சகோதரர்கள் உள்பட 51 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பழங்குடி மக்களின் நிலங்களை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தங்கள் தரப்பு வாங்கியதாக யக்யதத் சென்று பிரச்னை செய்ததாகவும் பின்னர் இது கைகலப்பாக மாறியதில் துப்பாக்கிச்சூடு நடந்ததாகவும் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.