தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரும் எடியூரப்பா? - kumarasamy

கர்நாடகா: குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ் - மஜத ஆட்சி கவிழ்ந்ததையடுத்து, இன்று ஆளுநர் வஜுபாய் வாலாவை சந்தித்து கர்நாடக பாஜக தலைவர் எடியூரப்பா ஆட்சியமைக்க உரிமை கோருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

எடியூரப்பா

By

Published : Jul 24, 2019, 10:14 AM IST

கர்நாடக சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி தலைமையிலான அரசு தோல்வியடைந்ததையடுத்து, முதலமைச்சர் குமாரசாமி ஆளுநரிடம் ராஜினாமா கடிதத்தை அளித்தார். ராஜினாமாவை ஏற்றுக்கொண்ட ஆளுநர், புதிய முதலமைச்சர் பதவியேற்கும் வரை பதவியில் தொடருமாறு கேட்டுக்கொண்டார்.

இந்நிலையில், ஆட்சியமைப்பதற்கான உரிமை கோர கர்நாடக பாஜக தலைவர் எடியூரப்பா ஆளுநர் வஜுபாய் வாலாவை இன்று சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று காலை 11 மணிக்கு பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறவுள்ள நிலையில், சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என தெரிகிறது.

மேலும், ஆளுநரை சந்திப்பதற்கு முன்னதாக கர்நாடக பாஜக தலைவர் எடியூரப்பா, பாஜக தலைவர் அமித் ஷா, பிரதமர் மோடி ஆகியோரை சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ABOUT THE AUTHOR

...view details