இந்திய - சீன எல்லை மோதல் விவகாரத்தில் பகுஜன் சமாஜ் கட்சி பாஜகவுக்கு உறுதுணையாக நிற்கும் என அக்கட்சித் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார். தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இந்த விவகாரத்தில் பாஜக, காங்கிரஸ் மாறி மாறி குறை கூறி அரசியல் செய்யக் கூடாது எனவும், இது அபாயகரமான போக்கு எனவும் மாயாவதி தெரிவித்தார்.
அதேவேளை இந்த எல்லைப் பிரச்னையில் மட்டும் கவனம் செலுத்தி, நாட்டு மக்களின் நலன்களை மறந்துவிடக் கூடாது என கேட்டுக்கொண்ட மாயாவதி, பெட்ரோல், டீசல் விலை தொடர் உயர்வு, மக்களுக்கு பெருஞ்சுமையை ஏற்படுத்தியுள்ளது எனக் கவலை தெரிவித்துள்ளார்.