தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

நடிகருடன் கூட்டணி சேரும் மாயாவதி - மாயாவதி

டெல்லி: ஆந்திரா, தெலுங்கானாவில் நடக்கும் மக்களவை தேர்தலில் பவன் கல்யாணுடன் கூட்டணி வைக்க போவதாக மாயாவதி அறிவித்துள்ளாா்.

மாயாவதி

By

Published : Mar 15, 2019, 4:32 PM IST

மக்களவை தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் ஆந்திராவில் நடக்கும் மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தலிலும், தெலுங்கானாவில் நடக்கும் மக்களவை தேர்தலிலும் பவன் கல்யாணின் ஜன சேனாவுடன் கூட்டணி அமைக்க போவதாக பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவரும் உத்தர பிரதேசத்தின் முன்னாள் முதல்வருமான மாயாவதி அறிவித்துள்ளாா்.

ஏற்கனவே, ஜன சேனாவுடன் இடதுசாரி கட்சிகள் கூட்டணி அமைத்த நிலையில் தற்போது மாயாவதியும் சேர்ந்து இருப்பது இந்த கூட்டணியை வலு சோ்த்து இருப்பதாக அரசியல் வல்லுநா்கள் கூறுகின்றனா்.

ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் வலுவாக இருப்பதாக கருத்து கணிப்புகள் கூறினாலும் பெரிய அளவில் ஜன சேனா கூட்டணி ஓட்டுகளை பிரிக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.

ABOUT THE AUTHOR

...view details