தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'பிஎஸ்என்எல் 4ஜி விரிவாக்க சேவைகளில் சீனா கருவிகளைப் பயன்படுத்த வேண்டாம்'

டெல்லி: பிஎஸ்என்எல் நிறுவனத்தின் விரிவாக்கப் பணிகளில் சீனாவின் கருவிகளைப் பயன்படுத்த வேண்டாம் என்று மத்திய அரசு தடைவிதித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

BSNL boycott china
BSNL boycott china

By

Published : Jun 18, 2020, 12:05 PM IST

இந்தியாவின் பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் தற்போது 4ஜி சேவைகளை வழங்குவதற்கான பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில், இந்தியா-சீனா எல்லைப் பிரச்னை எதிரொலியாக, பிஎஸ்என்எல் நிறுவனத்தின் விரிவாக்கப் பணிகளின்போது சீனக் கருவிகளைப் பயன்படுத்த வேண்டாம் என்று மத்திய அரசு முடிவெடுத்துள்ளது

இது தொடர்பான முந்தைய டெண்டர்கள் அனைத்தும் ரத்துசெய்யப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. புதிய டெண்டர்களில் சீனாவின் எந்த ஒரு நிறுவனமும் பங்கேற்க முடியாத கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தரமல்லாத உறுப்பினரான இந்தியா!

ABOUT THE AUTHOR

...view details