புதுச்சேரி மாநிலத்தில் உள்ள பிஎஸ்என்எல் நிறுவனத்தில் 175 ஒப்பந்த ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களுக்கு கடந்த 10 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை.
விஆர்எஸ் விருப்ப ஓய்வு பெற்றுள்ள 95 ஊழியர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன. அந்த காலியிடங்களை ஒப்பந்த ஊழியர்களைக் கொண்டு பணி நிரந்தரம் இன்னும் செய்யப்படவில்லை. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக 50விழுக்காடு ஒப்பந்த ஊழியர்களை பணியிலிருந்து குறைக்க பிஎஸ்என்எல் நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.
இந்த முடிவுகளை பிஎஸ்என்எல் நிர்வாகம் கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதுவை மாவட்ட பிஎஸ்என்எல் ஒப்பந்த ஊழியர்கள் சங்கத்தினர் பிஎஸ்என்எல் தலைமை அலுவலகத்தின் முதல் தளத்தில் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
பிஎஸ்என்எல் ஊழியர்கள் போராட்டம் சங்கத் தலைவர் கொளஞ்சியப்பன் தலைமையில் நடைபெற்ற இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் பிஎஸ்என்எல் ஒப்பந்த ஊழியர்கள் சங்கத்தினர் கலந்துகொண்டு ஒப்பந்த ஊழியர்களை ஆட்குறைப்பு செய்யும் முயற்சி கைவிட வலியுறுத்தினர்.
இதையும் படிங்க: பெண்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி... சேலத்தில் தொடக்கம்!