இந்தியாவின் கெடேவிலிருந்து வங்கதேச நாட்டிலுள்ள தர்ஷானாவுக்குச் செல்லும் சரக்கு ரயிலில் எல்லைப் பாதுகாப்புப் படையினர் வழக்கமான சோதனையை மேற்கொண்டனர். அப்போது, ஒரு பெட்டியின் சீல் சேதமடைந்திருப்பது போல் இருப்பதைக் கண்ட அவர்கள், பெட்டியின் கதவை விலக்கி பார்த்தனர்.
வங்கதேசத்திற்குக் கடத்த முயன்ற ரூ.46.5 லட்சம் மதிப்பிலான பொருள்கள் பறிமுதல்!
கொல்கத்தா: இந்தியாவின் கெடேவிலிருந்து வங்கதேச நாட்டிலுள்ள தர்ஷானாவுக்குச் செல்லும் ரயிலில் கடத்த முயன்ற 46.5 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருகள்களை பாதுகாப்புப் படையினர் பறிமுதல் செய்தனர்.
வங்கதேசத்திற்கு கடத்த முயன்ற ரூ. 46.5 லட்சம் மதிப்பிலான பொருள்கள் பறிமுதல்
அதில், சந்தேகத்திற்கிடமான பொருள்கள் இருப்பதை உணர்ந்துசுங்க அலுவலர்களுக்குப் பாதுகாப்புப் படையினர் தகவல் கொடுத்தனர். பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள், பெட்டியினுள்ள இருந்த அழகு சாதனப் பொருள்கள், மொபைல் போன், காலணிகள் உள்ளிட்டவற்றைக் கைப்பற்றினர். கைப்பற்றப்பட்ட பொருள்களின் மதிப்பு 46.5 லட்சம் ரூபாய் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: போதை பொருள்கள் கடத்த முயன்ற மூன்று பேர் கைது