ஜம்மு காஷ்மீர் யூனியன் கத்துவா மாவட்டத்தின் வழியே செல்லும், சர்வதேச எல்லைப் பகுதிக்குள் நுழைந்த பாகிஸ்தான் ட்ரோனை, இந்திய எல்லை பாதுகாப்பு படையினர் (பிஎஸ்எப்) சுட்டு வீழ்த்தினார்கள்.
இந்தச் சம்பவம் சனிக்கிழமை இரவு (ஜூன்19) ஹிரா நகர் தாலுகாவிலுள்ள ரதுவா கிராமத்தில் நடந்ததாக உள்ளூர் காவலர்கள் தெரிவித்துள்ளனர்.
சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தான் ட்ரோன் கிழக்கு லடாக் எல்லை விவகாரத்தில் இந்தியா- சீனா இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் பாகிஸ்தான் ட்ரோன் இந்திய எல்லைக்குள் ஊடுருவி உள்ளது.
இது தொடர்பாக தீவிர விசாரணை நடந்துவருகிறது. சில தினங்களுக்கு முன்பு ஜம்மு காஷ்மீரில் எட்டு பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர் என்பது நினைவு கூரத்தக்கது.
இதையும் படிங்க: 'சீனப் பொருள்களுக்கு தடை, இந்திய பொருளாதாரத்தை பாதிக்காது'- சுதேஷ் வர்மா