தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஆயுதக் கடத்தலில் ஈடுபட்ட பாதுகாப்புப் படை வீரர் பணி நீக்கம்! - சுமித் குமார் பாதுகாப்புப் படை வீரர்

காஷ்மீர்: ஆயுதக் கடத்தலில் ஈடுபட்ட சுமித் குமார் என்ற எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் கைது செய்யப்பட்டு பஞ்சாப் மாநிலக் காவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

BSF
BSF

By

Published : Jul 23, 2020, 9:38 AM IST

பஞ்சாப் மாநிலம், குருதாஸ்பூர் பகுதியைச் சேர்ந்தவர் சுமித் குமார். எல்லைப் பாதுகாப்புப் படையில் காவலராகப் பணிபுரிந்துவந்த இவர், இந்தியா - பாகிஸ்தான் எல்லையான சம்பா பகுதியில் பணியில் ஈடுபட்டுவந்தார். இவர், தேச விரோத சக்திகள், எல்லைத் தாண்டிய கிரிமினல்களுடன் தொடர்பில் இருந்ததாகப் புகார் வரவே, சந்தேகத்தின் பேரில் இவரது வீட்டில் எல்லைப் பாதுகாப்புப் படையினர் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அவரது வீட்டிலிருந்து ரூ.32.3 லட்சம் பணமும், துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

ஆயுதக் கடத்தலில் ஈடுபட்ட சுமித் குமார், கையும் களவுமாகக் பிடிபட்ட நிலையில், அவரை எல்லைப் பாதுகாப்புப் படை உடனடியாகப் பணிநீக்கம் செய்து, கூடுதல் விசாரணைக்குப் பஞ்சாப் காவல்துறையினரிடம் ஒப்படைத்தது. மேலும் இவ்விவகாரத்தில் தொடர்புடைய எட்டுப் பேரையும் பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:ரேஷன் பொருள்களை வீட்டிற்கே சென்று வழங்கும் பெங்களூரு நிர்வாகம்!

ABOUT THE AUTHOR

...view details