இந்தோ - திபெத் எல்லை காவல் படைத்தளபதி எஸ்.எஸ். தேஸ்வால், பி.எஸ்.எஃப். எனப்படும் எல்லைப் பாதுகாப்புப் படையின் தலைவராக தற்காலிகமாக நியமனம்செய்யப்பட்டுள்ளார்.
எல்லைப் பாதுகாப்புப் படையின் தலைவராக அவர் நியமிக்கப்பட்ட பின்பு, கட்ச் பகுதியில் அமைந்துள்ள எல்லைப்பகுதிகளை முதன்முறையாக அவர் பார்வையிடுகிறார்.
நேற்றை முன்தினம் பூஜ் பகுதியைச் சென்றடைந்த அவர், எல்லைப் பாதுகாப்புப் படை ஆய்வாளர் உள்ளிட்ட முக்கிய அலுவலர்களுடன் கூட்டம் ஒன்றை ஏற்பாடுசெய்து அதில் கலந்துகொண்டதாகவும் ரோந்துப்பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவலர்களுடன் கலந்துரையாடியதாகவும் அதிகாரப்பூர்வ அறிக்கைகள் தெரிவிக்கின்றன.