கைதுசெய்யப்பட்ட நபரிடம் நடத்திய விசாரணையில், அவரது பெயர் முகமது அபு தஹிர் என்பதும், அண்டை நாடான வங்க தேசத்தின் புர்புரியா பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது. 41 வயதான முகமது அபு, இடைத்தரகரின் உதவியோடு வங்க தேசத்தின் பிர்கானாஸ் மாவட்டத்தில் வேலைதேடி வந்ததாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதுகுறித்து எல்லைப் பாதுகாப்புப் படையினர் கூறுகையில், "இது ஆள்கடத்தல் வேலை என நாங்கள் சந்தேகிக்கிறோம். அப்பாவிகளிடம் அதிக பணம் பெற்று ஏமாற்றும் சம்பவங்கள் இங்கு அதிகம் அரங்கேறிவருகிறது. இதுபோன்று சரக்கு ரயிலுக்குள் மறைந்து இந்தியாவுக்குள் நுழையும் புதிய உத்தியை ஆள்கடத்தல் கும்பல்கள் கையாண்டுவருகின்றன. சரக்குகளை இறங்கிய பிறகு கன்டெய்னர்களை முறையாக சீல் வைத்து மூடுமாறு ரயில்வே துறையை நாங்கள் கேட்டுக்கொண்டுள்ளோம்" என்றார்.