பங்கு ஃப்ரோக்கிங் நிறுவனமான கார்வியை முதலீட்டாளர்கள் நன்கு அறிவார்கள். இந்நிறுவனம் வாடிக்கையாளர்களின் பத்திரங்களை தவறாக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பாக இந்திய பங்குச் சந்தை நிறுவனமான மும்பை பங்குச் சந்தை (பி.எஸ்.சி.) மற்றும் தேசிய பங்குச் சந்தைக்கும் (என்.எஸ்.சி) புகார்கள் தெரிவிக்கப்பட்டது.
இதுதொடர்பாக என்.எஸ்.சி. மற்றும் பி.எஸ்.சி. நிறுவனங்கள் விசாரணை நடத்தின.
இந்த நிலையில் வர்த்தகத்தின் முதல் நாளான இன்று பி.எஸ்.சி. ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அந்த அறிக்கையில், கார்வி ஸ்டாக் ஃப்ரோக்கிங் நிறுவனத்தின் லைசென்சை இடைநீக்கம் செய்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
கார்வி நிறுவனம் புதிய வாடிக்கையாளர்களை முதலீட்டுக்கு இழுப்பதை தடுக்கும் நடவடிக்கையாக, பங்கு சந்தை கட்டுப்பாட்டு வாரியம் (செபி) இந்த நடவடிக்கைக்கு அனுமதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பிரபல டிரேடிங் நிறுவனமான கார்வி உரிமம் ரத்து - கார்வி நிறுவன லைசென்ஸ் ரத்து
மும்பை: பங்கு வணிகத்தில் பிரபல டிரேடிங் நிறுவனமான கார்வியின் உரிமத்தை தேசிய பங்குச் சந்தை ரத்து செய்துள்ளது.
BSE, NSE suspend Karvy trading license
இதையும் படிங்க: ஏர்டெல், வோடஃபோன், ஜியோ கட்டணங்கள் உயர்வு!