தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஆளுநர் அழைப்பு: மீண்டும் முதலமைச்சராகிறார் எடியூரப்பா! - காங்கிரஸ்

பெங்களூரு: கர்நாடகாவில் ஆட்சியமைக்க வருமாறு பாஜகவுக்கு அம்மாநில ஆளுநர் வஜுபாய் வாலா அழைப்பு விடுத்துள்ளார். அதன்படி, எடியூரப்பா இன்று முதலமைச்சராக பதவியேற்கவுள்ளார்.

BSY

By

Published : Jul 26, 2019, 10:14 AM IST

Updated : Jul 26, 2019, 10:50 AM IST

கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ்-மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அரசு அதிருப்தி சட்டப்பேரவை உறுப்பினர்களின் ராஜினாமா காரணமாக கவிழ்ந்தது. இந்நிலையில் 105 சட்டப்பேரவை உறுப்பினர்களுடன் சட்டப்பேரவையில் தனிப்பெரும் கட்சியாக உள்ள பாஜக ஆட்சியமைக்க தீவிர முயற்சியில் ஈடுபட்டுவந்தது.

எடியூரப்பா பேட்டி

இந்நிலையில், அம்மாநில பாஜக தலைவர் எடியூரப்பா இன்று மாலை 6 மணியளவில் முதலமைச்சராக பதவியேற்கவுள்ளார். முன்னதாக ஆளுநர் வஜுபாய் வாலாவை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார் எடியூரப்பா.

அதன்படி, வஜுபாய் வாலா பாஜகவை ஆட்சியமைக்க அழைப்பு விடுத்துள்ளார். அதன்படி, முதலமைச்சராக பதவியேற்கவுள்ள எடியூரப்பாவுக்கு கர்நாடக ஆளுநர் பதவிப் பிரமாணமும் ரகசிய காப்புப் பிரமாணமும் செய்துவைக்கிறார்.

Last Updated : Jul 26, 2019, 10:50 AM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details