தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தர்ணாவில் ஈடுபட்டுள்ள முன்னாள் முதலமைச்சர்! - எடியூரப்பா

பெங்களூரு: கர்நாடக சபாநாயகர் அரசியலமைப்புக்கு எதிராக செயல்படுவதாக குற்றம்சாட்டி அம்மாநில முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா தலைமையில் பாஜகவினர் தர்ணாவில் ஈடுபட்டு வருகின்றனர்.

எடியூரப்பா

By

Published : Jul 10, 2019, 12:38 PM IST

கர்நாடகாவின் ஆளும் காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தள கூட்டணியைச் சேர்ந்த எட்டு அதிருப்தி சட்டப்பேரவை உறுப்பினர்களின் ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் நிராகரித்தார். இது அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது, அவர்களின் ராஜினாமா கடிதம் உடனடியாக ஏற்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி கர்நாடகாவின் முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா தலைமையில், பாஜகவினர் அம்மாநில சட்டப்பேரவை வளாகத்திற்கு முன்பு தர்ணாவில் ஈடுபட்டு வருகின்றனர்.

மறுமுனையில், காங்கிரஸ் மூத்த காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவகுமார் அதிருப்தியில் உள்ள சட்டப்பேரவை உறுப்பினர்களை சந்திப்பதற்கு முயற்சித்து வருகிறார். இதுகுறித்து, அதிருப்தி சட்டப்பேரவை உறுப்பினர் ரமேஷ் கூறுகையில், "சிவகுமாரை சந்திக்க எங்களுக்கு விருப்பமில்லை. மேலும், பாஜகவைச் சேர்ந்தவர்கள் யாரும் எங்களைச் சந்திக்க இங்கு வரவில்லை" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details