தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சாதி மறுப்பு திருமணம் செய்த இளைஞர் கொலை! - ஹரியானா மாநிலத்தில் சாதி மறுப்பு இளைஞர் கொலை

சண்டிகர்: ஹரியானா மாநிலத்தின் பானிபட் பகுதியில் குடும்பத்தினரின் எதிர்ப்பை மீறி சாதி மறுப்பு திருமணம் செய்த இளைஞரை அவரது சகோதரர்கள் கொலை செய்துள்ளனர்.

சாதி மறுப்பு திருமணம் செய்த இளைஞர் கொலை
சாதி மறுப்பு திருமணம் செய்த இளைஞர் கொலை

By

Published : Jan 2, 2021, 10:30 AM IST

ஹரியானா மாநிலத்தின் பானிபட் பகுதியைச் சேர்ந்தவர் நிராஜ் குமார். இவர், கடந்த சில நாளகளாக அப்பகுதியைச் சேர்ந்த கோமல் என்னும் பெண்ணை காதலித்து வந்துள்ளார்.

அப்பெண், மாற்று சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் நிராஜ் குமாரின் குடும்பத்தினர் அவரது காதலுக்கு மறுப்பு தெரிவித்து வந்துள்ளனர். இந்நிலையில், அவர் வீட்டின் தடுப்பை மீறி திருமணம் செய்துகொண்டனர்.

ஆணவக் கொலை:

இதனால், ஆத்திரமடைந்த நிராஜ் குமாரின் சகோதரர்கள் அஜய், விஜய், பவன் குமார் ஆகியோர் ஒன்று சேர்ந்து நிராஜ் குமாரை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளனர்.

இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், நிராஜ் குமாரின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர்.

காவல் துறை விசாரணை:

இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், கொலை செய்த சகோதரர்களை தேடி வருகின்றனர். மேலும், இது குறித்து நிராஜ் குமாரின் பெற்றோரிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முன்னதாக இதேபோல், ஹரியானா மாநிலத்தில் நேற்று (ஜன.01) குடும்பத்தினரின் எதிர்ப்பை மீறி நீதிமன்றத்தில் திருமணம் செய்துகொள்ள முயன்ற காதல் ஜோடியை, பெண் வீட்டார் சுட்டு கொலை செய்தனர்.

இதையும் படிங்க: சாதி மனிதனை சாக்கடையாக்கும்: ஆந்திராவில் ஆணவக் கொலை...

ABOUT THE AUTHOR

...view details