சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவிற்கு மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே பேட்டியளித்தார். அதில் தாம் தாக்கரே குடும்பத்தின் பாரம்பரியத்தை மீறிவிட்டதாகத் தெரிவித்திருந்தார். எனினும் தனது தந்தையின் கனவுகளை நனவாக்க இந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
சாம்னாவில் உத்தவ் தாக்கரேவின் பேட்டி வருமாறு:
அரசியலில் பதவியை ஏற்றுக்கொண்டதன் மூலம் தாக்கரே குடும்ப பாரம்பரியத்தை மீறிவிட்டேன் என்பது உண்மைதான். எனினும் இந்தப் பொறுப்பை ஏற்றுக்கொள்ளாமல் என்னால் சிவசேனா நிறுவனர் பால் தாக்கரேவுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாது.
அவரின் வாக்குறுதிகளை நிறைவேற்ற, இந்தப் பொறுப்பு இன்றியமையாதது என நினைத்தேன். ஆதலால் இந்தப் பதவியை நான் ஏற்றுக்கொண்டேன். நான் இதுவரைக்கும் எனது தந்தைக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. இது ஒருபடி மட்டுமே.