தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தேசிய நெடுஞ்சாலையில் இளைஞர் வெட்டிக் கொலை; தெலங்கானாவில் கொடூரம்! - highway murder

ஹைதராபாத்: தெலங்கானா மாநிலத்தில் பட்டப்பகலில் தேசிய நெடுஞ்சாலையில் கொடூரமாக ஒருவர் வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

telangana

By

Published : Jun 1, 2019, 12:10 AM IST

தெலங்கானா மாநிலத்தின் சங்கராரெட்டி மாவட்டத்தில் வழியாக பத்தன்சேரு தேசிய நெடுஞ்சாலையில் செல்கிறது. பரபரப்பாக காணப்படும் இந்தச் சாலையில், இன்று காலை மஹபூப் என்ற நபரை அடாயாளம் தெரியாத நபர் ஒருவர் சரமாரியாக வெட்டி கொலை செய்தார். மஹபூப் உயிரிழந்ததை உறுதி செய்து கொண்ட அந்த நபர், அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றார்.

இதனைக் கண்ட வாகன ஓட்டிகள் செய்வதறியாது அதிர்ச்சியில் உறைந்து நின்றனர். பட்டப்பகலில் தேசிய சாலையில் நடந்த இந்தக் கொடூர சம்பவம் தெலங்கானா மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அம்மாநில காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நெடுஞ்சாலையில் நபர் வெட்டி கொலைசெய்யப்படும் காட்சி

ABOUT THE AUTHOR

...view details