காஷ்மீருக்கான அனைத்துக் கட்சி நாடாளுமன்ற குழுவின் தலைவரான பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர் டெப்பி ஆப்ராஹமுக்கு இந்தியாவிற்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. முன்னதாக, டெல்லி விமான நிலையத்திற்கு வந்த அவரை அலுவலர்கள் துபாய்க்கு திருப்பி அனுப்பினர். அவரின் இ - விசா ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவர் திருப்பி அனுப்பப்பட்டதாக உள்துறை அமைச்சகம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
காஷ்மீர் விவகாரத்தை விமர்சித்த பிரிட்டன் எம்பிக்கு நாட்டில் நுழைய அனுமதி மறுப்பா? - பிரிட்டன் எம். பி இந்தியாவில் நுழைய தடை
டெல்லி: காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்தை விமர்சித்ததால்தான் இந்தியாவுக்கு வந்த தன்னை துபாய்க்கு திருப்பி அனுப்பியதாக பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர் டெப்பி ஆப்ரஹாம் குற்றஞ்சாட்டியுள்ளார்.
![காஷ்மீர் விவகாரத்தை விமர்சித்த பிரிட்டன் எம்பிக்கு நாட்டில் நுழைய அனுமதி மறுப்பா? MP](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-6104508-978-6104508-1581942359847.jpg)
இதுகுறித்து உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், விசா ரத்து செய்யப்பட்டது குறித்து அறிந்தபோதிலும் அவர் இந்தியா வந்தார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குடும்ப உறுப்பினர்களையும் நண்பர்களையும் பார்க்க உரிய விசாவுடன் வந்த தனக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக டெப்பி குற்றஞ்சாட்டியுள்ளார். இதுகுறித்து டெப்பி கூறுகையில், "விசா ரத்து செய்யப்பட்டது குறித்த இ- மெயில் பிப்ரவரி 13ஆம் தேதிக்கு முன்பு வரை எனக்கு வரவில்லை. அதற்குப் பிறகு நான் பயணத்தில் இருந்தேன்" என்றார்.
இதையும் படிங்க: வோடபோன் கோரிக்கையை நிராகரித்த உச்ச நீதிமன்றம் - சிக்கலில் வோடபோன் எதிர்காலம்?