தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கரோனா அச்சுறுத்தல்: கர்நாடகாவை பாராட்டிய பிரிட்டன் அமைச்சர் - கரோனா அச்சுறுத்தல்

பெங்களூரு: ஊரடங்கை சிறப்பான முறையில் அமல்படுத்தி கரோனாவை பெரிய அளவில் கட்டுப்படுத்திய கர்நாடகாவை பிரிட்டன் அமைச்சர் ராபர்ட் பக்லான்ட் பாராட்டியுள்ளார்.

பிரிட்டன் அமைச்சர்
பிரிட்டன் அமைச்சர்

By

Published : Apr 27, 2020, 1:22 PM IST

கரோனா வைரஸ் நோய் இந்தியாவில் வேகமாக பரவிவருகிறது. ஆரம்ப காலத்திலிருந்தே, கர்நாடகாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை குறைந்து காணப்படுகிறது. இதற்கு அங்கு பின்பற்றப்பட்டுவரும் விதிகளே காரணம் என பல்வேறு தரப்பினர் பாராட்டு தெரிவித்துவந்தனர். இதனிடையே, ஊரடங்கை சிறப்பான முறையில் செயல்படுத்தி மக்களுக்கு அத்தியாவசிய பொருள்களை கொண்டுச் சேர்த்த கர்நாடக அரசை பிரிட்டன் அமைச்சர் ராபர்ட் பக்லான்ட் பாராட்டியுள்ளார்.

கரோனாவை கட்டுப்படுத்த கர்நாடகா மாநிலம் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து இங்கிலாந்து வாழ் கன்னக மக்களிடம் வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் அம்மாநில முதலமைச்சர் எடியூரப்பா எடுத்துரைத்தார். இதில் பங்கேற்ற பக்லான்ட், இந்தியாவில் நிலவும் சூழ்நிலை குறித்து எடியூரப்பாவிடம் கேட்டறிந்தார். பின்னர் கன்னட மக்களின் கேள்விகளுக்கு பதிலளித்த எடியூரப்பா, மக்களின் ஒத்துழைப்பால் மட்டுமே வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தியதாக தெரிவித்தார்.

மத்திய அரசு அமல்படுத்திய விதிமுறைகளை பின்பற்றி பொருளாதாரம் சீரமைக்கப்படும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார். இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், "கர்நாடாகாவில் உள்ள உங்கள் உறவினர்கள் பாதுகாப்பாக உள்ளனர். நீங்கள் அதனை பற்றி கவலைப்பட வேண்டாம்" என்றார்.

இதையும் படிங்க:சென்சார் கேமராவுடன் இறந்து கிடந்த கழுகு: பொதுமக்கள் அதிர்ச்சி!

ABOUT THE AUTHOR

...view details